பீகாரில் காவல்நிலையம் சூறை…25 பேர் கைது

பாட்னா:

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த சத்ய பிரகாஷ் இன்று மணல் லாரி மோதி இறந்தார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பாருன் நகர் காவல் நிலையத்தை சூறையாடினர். அங்கு நின்ற மணல் லாரிகளுக்கும் தீ வைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

அந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க மக்கள் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக தான் காவல் நிலையத்தை மக்கள் சூறையாடியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.