சென்னை:
மிழகத்தில் இன்று உச்சபட்சமாக 25,463 பேருக்கு  கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்தே, பாதிப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சப்பட்சமாக  2174  பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  50,193 ஆக உய்ரந்துள்ளது.

தமிழகத்தில் இன்று  842 பேர்  குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந் தோர் எண்ணிக்கை  27,624  ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.  சவுதி, சிங்கப்பூர், குவைத், மலேசியாவிலிருந்து திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்,  மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 38 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும், கர்நாடகாவிலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கும், கேரளாவிலிருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 21,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7,73,707 பாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது