காஷ்மீரில் ஊடுறுவ காத்திருக்கும் 250 தீவிரவாதிகள்….அதிர்ச்சி தகவல்

ஸ்ரீநகர்:

இந்திய ராணுவத்தின் ஸ்ரீநகர் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவு அதிகாரி ஏ.கே. பட், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘தீவிரவாதிகள் நடமாட்டம் தெற்கு காஷ்மீரை விட வடக்கு காஷ்மீரில் குறைவாக உள்ளது. இதற்கு வடக்கு காஷ்மீர் மக்கள், இளைஞர்கள் அளிக்கும் ஒத்துழைப்பு தான் காரணம்.

இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 250 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் தயாராக உள்ளனர். 25 முதல் 30 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பதுங்கியுள்ளனர்’’ என்றார்.