ல்ஜீயர்ஸ், அல்ஜீரியா

ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துள்ளாகி 250க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அல்ஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸில் இருக்கிறது பவுஃபரிக் விமான நிலையம். இங்கிருந்து 250க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு தென்மேற்கு அல்ஜீரியாவின் பேகர் பகுதியை நோக்கி ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம், கிளம்பிய ஓரிரு நிமிடங்களுக்குள் பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் தற்போது வரை 257 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் 14 ஆம்புலன்ஸ்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்துக்கான தெளிவான காரணங்கள் தெரியவில்லை.