நியூயார்க் :

 

ஐக்கிய நாடுகள் சபையில் ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார் வந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.


ஐ.நா ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார்கள் வந்துள்ளன. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தகவல்வின் பொதுச் சபையில் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்து ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் பேசும்போது, “கடந்த ஆண்டு ஜனவ
ரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஐநா சபை ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக 148 புகார்கள் வந்துள்ளன.

ஐநா-வின் திட்டங்களை செயல்படுத்தும் சார்பு அமைப்புகளின் ஊழியர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக 111 புகார்கள் வந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளை விட புகார்களின் எண்ணிக்கை அதிகமாகும். அனைத்து புகார்களும் சரிபார்க்கப்படவில்லை. பல புகார்கள் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளன.

ஐநா அமைப்புக்குள் பாலியல் குற்றம் நிகழ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர், இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.
பாலியலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிடம் இருந்து மட்டும் நல்ல வரவேற்பு இருந்தது” என்றார்.