வேலைநிறுத்தப்போராட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்! திருமாவளவன்

சென்னை,

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது.

அதில், தமிழகத்தில் வரும் 25ந்தேதி பந்த் நடத்த அழைத்து விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கூறியதாவது:-

வரும் 25ந்தேதி  விவசாயிகளுக்காக நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். குறிப்பாக வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

இது விவசாயிகள் சம்பந்தப்பட்ட தமிழகத்தின் ஒட்டு மொத்த பிரச்சினையாகும். ஆகவே கட்சி பாகுபாடின்றி அனைவரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் அரசியலோடு அனைத்துக் கட்சி கூட்டத்தை பார்க்க கூடாது என்றும், அனைத்துக் கட்சி தலைவர்களும் டில்லி சென்று பிரதமரை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம், எங்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்குவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி