ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந் துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும்  8.22 லட்சமாக அதிகரித்து உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ். இதை கட்டுப்படுத்த உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி, 2,40,48,856 ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8.23,180 ஆக அதிகரித்து உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,65,97,318 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போதையை நிலையில், 61,719 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில்,  அபாய கட்டத் தில் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறத. அங்கு  கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சமாகும். இதுவரை 1.82 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 39,191 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் இதுவரை 36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.16 லட்சம் பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 46,959 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 59,612 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 66,873 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா முதலிடத்தில் உள்ளது.