டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு காரண மாக உலக அளவில் இந்தியா 3வது இடத்திலும்,  தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத் திலும்  உள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,04,332 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 64,151 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 24,67,252 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1066 பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,612 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கபட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 10,425 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை  7,03,823 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 1,65,921 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,14,790 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 22,794 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு காரணமாக  தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5951 பேருககு தொற்று உறுதியான நிலையில், 3,91,303 ஆக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில்,  52,128 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 6721 பேர் உயிரிழந்து உள்ளனர். இதவரை 3,32,454 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இதுவரை 2வது இடத்தில் இருந்து வந்த ஆந்திர மாநிலம் தற்போது 3வது இடத்துக்கு சென்றுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,71,639 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3460 பேர் உயிரிழந்த நிலையில், 89,932 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,78,247 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.