ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா உள்பட  200 மேற்பட்ட உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,27,58,989 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,93,435 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,41,73,040 ஆக அதிகரித்து ள்ளது. தறபோதைய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 72,44,184 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,93,435 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2,41,73,040 பேர்  குணமடைந்துள்ள நிலையில், தற்போது, 75,92,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பில் தொடர்ந்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 59,01,571 ஆக உள்ள நிலையில், 48,46,168 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை 94,410 பேர் பலியான நிலையில், தற்போது, 9,61,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3வது இடத்தில் பிரேசில் தொடர்ந்து வருகிறது. அங்கு இதுவரை  4,692,579 பேர் தொறறால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 40,40,949 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையிலி, 510,921 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,40,709பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.