26 நாட்கள் சிகிச்சை: அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்..

சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து  வீடு திரும்பினார்.

கொரோனா ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் விரைவில் குணமடைந்த முதல்வர் மட்டுமின்றி  எதிர்க்கட்சித்தலைவரம், திமுக தலைவருமா முக ஸ்டாலினும்  எம்எல்ஏ பழனி விரைவில் குணமடைந்து மக்கள் பணி ஆற்ற வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

கடந்த ஜூன் 12 ந்தேதி கொரோனா காரணமாக  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  26 நாட்கள் சிகிச்சைக்குப் பின் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பழனி வீடு திரும்பி உள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட எம்.எல்.ஏ. பழனி மருத்துவர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி