லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்குதல் காரணமாக 26 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலம்  மெய்ன்புரி, ஃபருக்காபாத், மொராதாபாத், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயங்கர புழுதிப்புயல் சுழன்று அடித்தது. இந்தபுயலுக்கு பல இடங்களில் உள்ள  மண் வீடுகள், தகர கொட்கைகள்  இடிந்து விழுந்தன.

இரவு நேரத்தில் புழுதி புயல் தாக்கியதால், வீடுகள் கட்டிடங்கள் இடிந்தது விழுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த பலர்   இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. விளம்பரப்பலகைகள் காற்றில் பறந்து சென்று சாலையில் சென்றோர் மீது விழுந்ததில் காயமடைந்தனர்.

இதில் 16 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோரின் எண்ணிக்கை   26 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  57 பேர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று மாநலி அரசு தெரிவித்து உள்ளது.