செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்கள், 4 செவிலியர்கள்: உறுதியானது கொரோனா தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.  செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எல்லையில் 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகின்றன.

மொத்தம் 28 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பாதுகாப்பு பணியில் 1300-க்கும் மேற்பட்ட  போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,650 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி