இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர் எண்ணிக்கை 26 லட்சம்!

சென்னை: தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில், இந்தக் கல்வியாண்டில் சுமார் 26 லட்சம் மாணாக்கர்கள் தேர்வெழுதவுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டார ‍செய்திகள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பிரிவுகளில்(11 & 12) பயிலும் மாணாக்கர்களுக்கு இது பொதுத்தேர்வு காலம்!

முன்பு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 11ம் வகுப்பிற்கும் சேர்த்து பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அன‍ைத்துத் தேர்வுகளுமே அடுத்த மாதம் (மார்ச்) நடத்தப்படவுள்ளன. இந்தாண்டு, அனைத்து வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் 26 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பில் 9.44 லட்சம், 11ம் வகுப்பில் 8.28 லட்சம் மற்றும் 12ம் வகுப்பில் 8.16 லட்சம் என்று மொத்தமாக சுமார் 26 லட்சம் மாணாக்கர்கள் என்பதான விபரங்களை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை வட்டாரம்!