சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாதிரி புகைப்படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் சிகிச்சை அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளித்தது.  அரசு இதற்காகக் கட்டண வரம்பையும் அறிவித்தது.  லேசான அறிகுறிகள் உள்ளோரிடம் ரூ.7500 வரையிலும் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15000வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவு இட்டிருந்தது.

பல தனியார் மருத்துவமனைகளில் இதைப் பின்பற்றாமல் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.  இந்த புக்கர்கலின் டிப்பஎடையில் தமிழக சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.  அந்த ஆய்வின் அடிப்படையில் 26 மருத்துவமனைகள் இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்த 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளது.  மீதமுள்ள 18 மருத்துவமனைகள் அதிகமாகப் பெற்ற கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டண விகிதம் குறித்த அறிவிப்பை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.