உ.பி.: 2 காப்பங்களில் வசித்து வந்த 26 பெண்களை காணவில்லை: மாவட்ட நீதிபதி தகவல்

பிரசாத்கார்க்:

உ.பி. மாநிலத்தில் செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 26 பெண்களை காணவில்லை என்று மாவட்ட நீதிபதி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் காப்பங்களில் உள்ள சிறுமிகள், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் படுவதும், கொலை செய்யப்படுவது குறிதும் கவலை தெரிவித்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து,  மாவட்ட நீதிபதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள காப்பங்களை ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, காப்பங்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  இதன்படி உ.பி. மாநிலத்தில் மாவட்ட நீதிபதிகள் நடத்திய ஆய்வில் 26 பெண்கள் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்  பீகார் முசாபர்நகர் காப்பகத்தில் தங்கி படித்து சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த காப்பகத்துக்கு சில் வைக்கப்பட்டு காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இதுபோன்ற காப்பகங்கள் உ.பி.யிலும் செயல்பட்டு வருகிறது.  அங்கும் காப்பங்களில் இருந்து பல பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில்  ஜகரதி என்ற பெயரில் காப்பகம் ஒன்று அஷ்புஜாநகர் (Ashtbhuja Nagar) என்ற இடத்தில்  உள்ளது. இந்த காப்பகத்தை பாரதிய மகிளா மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவர் ராமா மிஷ்ரா என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில்  மாவட்ட நீதிபதி சாம்பு குமார்  திடீர் என சோதனை மேற்கொண்டார்.

அப்போது, அந்த காப்பகத்தில் 15 பெண்கள் இருந்தாக பதிவேட்டில் உள்ளது. ஆனால், சோதனை யின் போது ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.இது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் காப்பக மேலாளர், தற்போது இந்த காப்பகம் செயல்படவில்லை என்று மறுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அசல்பூர் என்ற பகுதியில் செயல்பட்டு வந்த மற்றொரு காப்பகத்தில், நீதிபதி சத்யா பிரகாஷ் என்பவர் சோதனை மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 15 பேர் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், 12 பேரை காணவில்லை.

இதுகுறித்து காப்பக பாதுகாப்பாளர் நேகா பிரவீன் என்பவர் கூறும்போது,  இந்த காப்பகம் இயங்க வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கவில்லை என்றும்  தங்கள் சொந்த வளங்களைக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை குறித்து அறிக்கை அளித்துள்ள மாவட்ட நீதிபதி, காப்பக பதிவேட்டில் உள்ளதாக கூறப்படுவதில், 26 பெண்கள் காணவில்லை என்ற கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி