புதுடெல்லி: நாடு முழுவதும் 62 நகரங்களில் மொத்தமாக 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்றும், அதில் தமிழகத்தில் அமையவுள்ள மையங்களின் எண்ணிக்கை மட்டும் 256 எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றவுடனேயே பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு பல்வ‍ேறு வகையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான், பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான சார்ஜ் மையங்கள்.

பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

மராட்டியத்தில் 317, ஆந்திரத்தில் 266, தமிழ்நாட்டில் 256, குஜராத்தில் 228, ராஜஸ்தானில் 205, உத்திரப்பிரதேசத்தில் 207, மத்தியப் பிரதேசத்தில் 159, கர்நாடகாவில் 172, மேற்கு வங்கத்தில் 141, தெலுங்கானாவில் 138 மற்றும் கேரளத்தில் 131 என்று மாநில வாரியாக எங்கெங்கு எத்தனை மையங்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.