ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040  பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இன்று காலை 8 மணி நிலவரப்படி,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 113,985,109  ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89,539,076  பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 25 லட்சத்து 29 ஆயிரத்து337 பேர் உயிரிழந்துள்ளனர்
தற்போதைய நிலையில், 21,916,696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் 91,046 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.