ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 12 கோடியே 66 லட்சத்துக்கு 83ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் 2,77,88,89  ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று ஓராண்டைகடந்தும், கட்டுக்குள் அடங்காமல் உருமாறிய நிலையில், பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் டுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இருந்தாலும், 2-வது, 3-வது அலை என மீண்டும் மீண்டும் பரவி அச்சுறுத்தி வருகிறது.
உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.66 கோடியாக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 8 ஆயிரத்து 89-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரத்து 061- ஆக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ம் இடத்திலும்  இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன.