27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உச்சத்தில் உள்ளது.  நேற்று மட்டும் புதிதாக 646 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11, 640 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலத்தில், ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக அதிகரித்துள்ளது.

அதையடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,525 பேரும், திரு.வி.க. நகரில் 1,285 பேரும் மற்றும் தேனாம்பேட்டையில் 1,262 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

You may have missed