27/07/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 78,940 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலை யில், 13,744 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2011 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.