27/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,29,247-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று  மட்டுமே 1,137 பேர் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டுள்ளனர். இதுவரை  கொரோனா பாதிப்பில்  இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 1,13,092 பேர்.

தற்போதய நிலையில், 13,517 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,638 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 13,340 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையில் 60.06% ஆண்களும் 39.94% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று(26.08.2020) மட்டும், 13,340 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.


மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,877
2     மணலி        1,874
3     மாதவரம்        3,936
4     தண்டையார்பேட்டை   10,071
5     ராயபுரம்        11,910
6     திருவிக நகர்        8,699
7     அம்பத்தூர்        7,628
8     அண்ணா நகர்    12,905
9     தேனாம்பேட்டை    11,522
10     கோடம்பாக்கம்    12,981
11     வளசரவாக்கம்    6,868
12     ஆலந்தூர்        3,888
13     அடையாறு       8,461
14     பெருங்குடி        3,499
15     சோழிங்கநல்லூர்    2,897
16     இதர மாவட்டம்    2,076.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    283
2     மணலி        173
3     மாதவரம்        598
4     தண்டையார்பேட்டை    977
5     ராயபுரம்        849
6     திருவிக நகர்        1,008
7     அம்பத்தூர்        1,267
8     அண்ணா நகர்    1,533
9     தேனாம்பேட்டை    881
10     கோடம்பாக்கம்    1,579
11     வளசரவாக்கம்    1,041
12     ஆலந்தூர்        655
13     அடையாறு        1,277
14     பெருங்குடி         554
15     சோழிங்கநல்லூர்    610
16     இதர மாவட்டம்   232 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.