27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். அதிகபட்சமாக சென்னையில்  நேற்று மட்டும் 747  பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில்  747 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,96,378 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,83,923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக  3,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 8,856 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 10,589 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.