Random image

28/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரிப்பு …

டில்லி:  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93லட்சத்து 51ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 41,353 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  93,51,224 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 486  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,36,238 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 4,53,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 41,177 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 87,58,886 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தொடர்கிறது.  2வது இடத்தில் கர்நாடக மாநிலமும், 3வதுஇடத்தில் ஆந்திராவும், 4வது இடத்தில் தமிழகமும் தொடர்ந்து வருகிறது.