எலிக்காய்ச்சலால் கேரளாவில் 27 பேர் மரணம்
திருவனந்தபுரம்
அண்மையில் பெய்த கனமழையால் கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவி 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் வீடிழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். நாடெங்கும் இருந்து கேரளாவுக்கு நிவாரண நிதியும் நிவாரணப் பொருட்களும் வந்தன. மழை நின்றுள்ள படியால் நிவாரண பணிகள் துரிதம் அடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்ற்னர்.
மழைக்குப் பின்னால் வரும் தொற்று நோய்கள் தற்போது கேரளாவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. அதிலும் அந்த மாநிலத்தில் தற்போது எலிக்காய்ச்சல் படு வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எலிக் காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுவரை எலிக்காய்ச்சலினால் 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கோழிக்கோட்டை சேர்ந்த அனில், நாராயணி, ரவி, மற்றும் பட்டினம்திட்டாவை சேர்ந்த ரஞ்சு, மற்றும் தொடுபுழா பகுதியில் வசிக்கும் ஜோசப் மேத்யூ, ஆகிய ஐவர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 250 க்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.