கனடா: துப்பாக்கியால் சுட்டு இந்தியர் படுகொலை….4 பேர் வெறிச் செயல்

ஓட்டவா:

கனடா டான்வுட்ஸ் பகுதியை சேர்ந்தவர் பல்விந்தர் சிங் (வயது 27). இந்தியரான இவர் 2009ம் ஆண்டி-ல் கனடாவில் குடியேறி டிரக் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில் டான்வுட்ஸ் சாலையில் வீட்டு வாசலில் நின்ற பல்விந்தர் சிங்கை 4 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் 2 பேர் சரணடைந்துள்ளனர்.