டெல்லி
ந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு  8 லட்சத்தை கடந்துள்ளது.  உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,20,916 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,83,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,15,386 பேர் குணமடைந்துள்ளனர். 22,123 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  27,114 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 519 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதம் 62.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 7,862 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களாக கண்டறியப்பட்டனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 2,38,461 ஆக உயர்ந்துள்ளது. தற்போதை நிலையில்,  95,647 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இந்த பகுதி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.