ந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல், இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
குஜராத் மாநிலம் கேவதியா பகுதியில் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.


‘ஒருமைப்பாட்டு சிலை’ என்று வர்ணிக்கப்படும் இந்த சிலையை பிரதமர் மோடி, வல்லபாய் பட்டேலின் 143 – வது பிறந்த நாளான கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, இந்த சிலையும் சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிலை மீண்டும் வருகிற 2 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, இந்த சிலையின் பாதுகாப்பு பணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டமாக தொழில் பாதுகாப்பு படையின் 272 வீர்ர்கள்,சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ மற்றும் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மட்டுமே இதுவரை தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.