புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.வி.அசோகன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அரசு மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

இதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மருத்துவர்கள் மரணம் மற்றும் நிவாரண உதவி தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு இன்னும் பதில் வரவில்லை.


கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதிய நேரத்தில் 196 மருத்துவர்கள் மரணம் அடைந்திருந்தனர். இந்த இரண்டு வாரத்தில் அது 273 ஆக அதிகரித்துள்ளது.