இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா: 3,374 பேருக்கு பாதிப்பு!

டெல்லி:

ந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், இதுவரை  3,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளதாகவும்,  மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியளார்களிடம் பேசிய லாவ் அகர்வால்`இந்தியாவில் 274 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 3,374 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 267 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளர்.

மேலும்,  தப்லிக் ஜமாத் மாநாடு காரணமாக புதிய நோயாளிகள் பதிவாகாமல் இருந்திருந்தால் இந்த விகிதம் குறைவாகவே இருந்திருக்கும், ஆனால், கடந்த 4 நாட்களாக நாள்களாக  கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக உயர்ந்து வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு  தேவையான உபகரணங்கள், கையிருப்பில் இருந்தவை அனைத்தும், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.  உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டனர். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கிறதோ அதை வாங்கும் பணிகளும் நடந்து வருகிறது.

மாநிலங்களின் தேவையைப் பொறுத்தே, எங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை மாநிலங்களில் தேவைக்களுக்கேற்ப உடனடியாக அனுப்பியதாக அவர்களுக்கு விளக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி