1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 4வது நாளாக இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஐசிஎம்ஆர் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவரான ராமன் கங்காகேதார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இந்தியாவில் இன்றைய (22.05.2020) மதியம் 1 மணி நிலவரப்படி 27,55,714 பேருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகளில் 18287 சோதனைகள் தனியார் மையங்களில் நடத்தப்பட்டவையாகும்.

அதுதவிர, இன்றைக்கும் தொடர்ந்து 4வது நாளாக 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.