28/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!

சென்னை:  தமிழகத்தில் இன்று 1,005 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்,  இன்று  285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  12,080 ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக  சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 3,996 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று  1,074 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,94,228 பேர்.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,867 ஆக உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 720 பேருக்குத் தொற்று உள்ளது. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,92,604 பேர். பெண்கள் 3,22,537 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர். இன்று  தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 624 பேர். பெண்கள் 381 பேர்.

இதுவரை கொரோனா சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,39,87,769. இன்று  மட்டும் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 63,242.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக  67 அரசு ஆய்வகங்கள், 168 தனியார் ஆய்வகங்கள் என 235 ஆய்வகங்கள் உள்ளன.