மே.வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் திரினாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பெயரை கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

சிட்டிங் எம்,எல்.ஏ.க்கள் 28 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. 114 பேர் புது முகங்கள்.

நந்திகிராம் தொகுதியில் மம்தா போட்டியிடுகிறார்.

“நந்திகிராம் தொகுதியில் நிற்பேன் என ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த வாக்கை காப்பாற்றி உள்ளேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்” என மம்தா தெரிவித்தார்.

அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில், முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என தெரிகிறது. இவர், மம்தாவின் வலதுகரமாக திகழ்ந்தவர்.

காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

மே.வங்கத்தில் முஸ்லிம் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள அப்பாஸ் சித்திக், இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்ற கட்சியை கடந்த மாதம் தொடங்கினார்.

இந்த கட்சி காங்கிரஸ் – மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அப்பாஸ் சித்திக்கை, மம்தா பானர்ஜிக்கு எதிராக களம் இறக்க, காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி திட்டமிட்டுள்ளது.

– பா. பாரதி