நேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…

டெல்லி:
ந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர்  புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  9லட்சத்தை தாண்டியது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில்  28,498பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.   இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 23,727 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 5,71,460 பேர்  கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் .

மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்வுந்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்து உள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.