அமர்நாத் யாத்திரை: 22 நாட்களில் 2.85 லட்சம் பேர் தரிசனம்

--

 

ஸ்ரீநகர்:

ந்த ஆண்டு  அமர்நாத் யாத்திரை தொடங்கிய  22 நாட்களிலேயே 2,85,385 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் தெரிவித்துஉள்ளது. அதுபோல, இந்த ஆண்டு இதுவரை 22 பேர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அமர்நாத்  புனித யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி தேதி தொடங்கியது.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

காஷ்மீரில் உள்ள   அனந்த்நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் யாத்திரை நடைபெறுகிறது. இங்குள்ள முகாம்களில் இருந்து யாத்ரிகள் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

இடையிடையே மழை காரணமாக யாத்திரை தடைபட்ட நிலையிலும் தொடர்ந்து பனி லிங்கத்தை யாத்ரீகர்கள் தரிசித்து வந்த வண்ணம் உள்ளனர். இடையில்,  ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி புர்ஹான் வானியின் மூன்றாவது நினைவு நாளை, முன்னிட்டு, இரண்டு நாள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் புனித யாத்திரை தொடர்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மொத்தம், 46 நாட்கள் இந்தபுனித யாத்திரை நடைபெற உள்ளது. பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதி லும் இருந்து பல லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். கடந்த ஆண்டு 60 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற்றது. அப்பபோது மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

நடப்பு ஆண்டில் 46 நாட்கள் மட்டுமே பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கடந்த 22 நாட்களிலேயே 2,85,385 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.