குரூப்-2 தேர்வுக்கு 2868 தேர்வு மையங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை:

மிழகம் முழுவதும்  வரும் (நவம்பர்) 11-ம் தேதி நடைபெற உள்ள  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்காக  2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 1199 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்திருந்தது.

சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி உள்பட 1199  காலிய பணியிடங்களை நிரம்பும் வகையில்,  குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 10ந்தேதி அறிவிக்கப்பட்டது.  அதன்படி, வரும் 11ந்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்காக இதுவரை  6,26,503 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்காக  தமிழகம் முழுவதும் 2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

மேலும்,  ‘குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும், அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்றும் கூறி உள்ளார்.