ரஜினியின் 28 வருட ’அண்ணாமலை’ ஹேஷ் டேக் கொண்டாட்டம்..

திரையில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் வந்தாலே காது ஜவ்வு கிழியும் அளவுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்க வைக்கும் ரசிகர் கூட்டத்தை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.


28 ஆண்டுக்கு முன் தியேட்டரை அதிர வைத்த அந்த விசில் சத்தம் தற்போது இணைய தளத்தை ஹேஷ் டேக் மூலம் அதிர வைத்துக்கொண்டிருக் கிறது. 28 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 1992 ஜூன் 27ம் தேதி வெளியாகி பரபரக்க வைத்த படம் ’அண்ணா மலை’.
சரத்பாபுவிடம் தொடைதட்டி சவால் விட்ட பால்கார ரஜினியின் வசன காட்சியாகட்டும் மேளத்தை தட்டி வந்தேன்டா பால்காரன் பாடல் பாடிய வேகமாகட்டும் இன்னும் கண்களை விட்டு அகலவில்லை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் குஷ்பு ஹீரோயினாக நடித்திருந்தார். தேவா இசை அமைத்திருந்தார்.
கொரோனாவில் ஊரே அடங்கியிருந் தாலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அடங்காமல் 28வது ஆண்டு ஹேஷ்டேக் உருவாக்கி தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர்.