29/06/2020: செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில்  கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று (28.6.20)ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி யானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எணிண்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையு,   1,079 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி உள்பட 6 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இருந்தாலும் சென்னை, மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.