29/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை:

மிழகத்தில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலதலைவர் சென்னையில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று  1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு  53,762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 31,858 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,094 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் 809 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் ஒட்டு மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட ள்ளது.

அதன்படி இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 59.92% பேர் ஆண்கள், 40% பேர் பெண்கள்.