29/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:

மிழகத்தில் இன்று  ஒரே நாளில் 6972  பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 81,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,852 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக, சென்னையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி,  திருவொற்றியூர் மண்டலத்தில் 442 பேரும், மணலியில் 158 பேரும், மாதவரத்தில் 543 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 634 பேரும்,  ராயபுரத்தில் 808 பேரும், திருவிக நகரில் 1,129 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பத்தூர் மண்டலத்தில் 1159 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,456 பேரும், தேனாம்பேட்டையில் 1,014 பேரும், கோடம்பாக்கத்தில் 1840 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வளசரவாக்கத்தில் 1005 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 565 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,203 பேரும் பெருங்குடியில் 464 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 430 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 2 பேர் கொரோனா   பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.