29/09/2020: சென்னையில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை:  சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அரசு பல்வேறு  தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,64,744 ஆக உயர்நதுள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து, 1,50,522 பேர் குணமடைந்த நிலையில், 3,179 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில் 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்குக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 10ஆயிரத்தை தாண்டி  11 ஆயிரத்தை எட்டியுள்ளது.கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், சென்னையில்  கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்,

கோடம்பாக்கம் – 1,231 பேர்

அண்ணா நகர் – 1,245 பேர்

தேனாம்பேட்டை – 1,058 பேர்

தண்டையார்பேட்டை – 730 பேர்

ராயபுரம் – 880 பேர்

அடையாறு- 971 பேர்

திரு.வி.க. நகர்- 903 பேர்

வளசரவாக்கம்- 856 பேர்

அம்பத்தூர்- 791 பேர்

திருவொற்றியூர்- 249 பேர்

மாதவரம்- 415 பேர்

ஆலந்தூர்- 630 பேர்

பெருங்குடி- 485 பேர்

சோழிங்கநல்லூர்- 341 பேர்

மணலியில் 193 பேர்