தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள்! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

தர்மபுரி:

தி.மு.க. இளைஞர் அணியில் 29 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

ர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இதில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,  இன்று 2-வது முறையாக இளைஞர்அணி பாசறை கூட்டத்திற்காக தர்மபுரிக்கு வந்திருக்கிறேன். இளைஞர் அணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். தற்போது 29 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம்.

தர்மபுரி என்றாலே 2 வி‌ஷயங்கள் ஞாபகத்திற்கு வரும். ஒன்று தலைவர் (மு.க. ஸ்டாலின்) கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மற்றொன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 29 lakh members in DMK youth squad, says Udhayanidhi Stalin, உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி
-=-