டில்லி:

லைநகர் டில்லியில் நாளை 29 மாநில விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

விவசாயிகளின்  அனைத்து வங்கி கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தி பொருள்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மானியம் வழங்கப்பட வேண்டும் , விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட 69 அகில பாரத விவசாய அமைப்புகள் சார்பில் நாளை  போராட்டம் நடைபெறுகிறது.

ஏற்கனவே அறிவித்தபடி இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டில்லியில் குவிய தொடங்கி உள்ளனர்.

தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் அதிகமான விவசாயிகள்  நேற்று  ரெயில் மூலம் டில்லி புறப்பட்டு சென்றனர். மேலும் பல விவசாயிகள் இன்று புறப்பட்டு செல்கின்றனர்.

டில்லி ஜந்தர் மந்தரில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டில்லியே ஸ்தம்பிக்கும் என விவசாய சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள், தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏற்கனவே பல முறை டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.