சென்னை:

மிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உட்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது,

சென்னையில் காலியாக உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற தலைமை நீதிபதியாக விழுப்புரம் மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி நியமிக்கப்பட்டுள்ளார். 6வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக ஈரோடு கூடுதல் நீதிபதியாக இருந்த ஆனந்த், 7வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக பரமக்குடி கூடுதல் நீதிபதி அனில்குமார், 15வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக, சிவகங்கை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் உட்பட 27 மாவட்ட நீதிபதிகள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னையில், எழும்பூர் 2வது பெருநகர மாஜிஸ்திரேட்டாக கோபிநாத், 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பாக்கிய ஜோதி, எழும்பூர் ஏசிஎம்எம்-ஆக ரவி, 10வது சிட்டி சிவில் நீதிபதியாக அமுதா, 11வது சிட்டி சிவில் நீதிபதியாக அருள்மொழிசெல்வி, 12வது சிட்டி சிவில் நீதிபதியாக வித்யா, 6வது சிறுவழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக சுதா, 16வது சிட்டி சிவில் நீதிபதியாக மோகனா நியமிக்கப்பட்டுள்ளனர்.

18வது சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக மணிமேகலை, 3வது சிட்டி சிவில் நீதிபதியாக விஜயராணி, 4வது சிட்டி சிவில் நீதிபதியாக ஆப்ரகாம் லிங்கன், 5வது சிட்டி சிவில் நீதிபதியாக அப்துல் மாலிக், 6வது சிட்டி சிவில் நீதிபதியாக சுவாமிநாதன், 7வது சிட்டி சிவில் நீதிபதியாக கணபதிசாமி, 17வது சிட்டி சிவில் நீதிபதியாக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

18வது சிட்டி சிவில் நீதிபதியாக சசிகலா, 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பிரபாகரன், 4வது சிட்டி சிவில் நீதிபதியாக சிவகுமார் உட்பட தமிழகம் முழுவதும் 87 சீனியர் சிவில் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் 181 மாஜிஸ்திரேட்கள் (சிவில் நீதிபதிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  28 மாவட்ட நீதிபதிகளும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.