சென்னை:

மிழகம் முழுவதும்ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட  2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுத்தாக்கல் கடந்த 9ந்தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் (16ந்தேதி) முடிவடைந்தது. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறத.

இந்த நிலையில்,  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2,98,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2.06 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54,747 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32,939 பேர் வேட்பு மனு தாக்கல்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.