2019, பிப்ரவரி 7 முதல் 2ஜி ஊழல் மீண்டும் தொடர் விசாரணை: டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி:

2ஜி மேல்முறையீடு வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வேகமான முறையில் (ஃபாஸ்ட் டிராக்)  விசாரிக்கப்படும் என்று டில்லி உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

முந்தைய காங்கிரஸ்  தலைமையிலான ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த ராஜா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2 அலைக்கற்றை ஒதுக்கியத்தில் முறைகேடு  நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி  சிபிஐ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அப்போது,   வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட 14 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட இந்த வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருந்தன.

இந்நிலையில், அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில் கடந்த மார்ச் 19ந்தேதி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல  சிபிஐ சார்பிலும்  டில்லி ஐகோர்ட்டில்  மார்ச் 20 ந்தேதி மேல்முறையீடு வழக்கு தாக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 6 மாதமாக இழுத்துக்கொண்டே செல்லும் நிலையில், வழக்கின் விசார ணையை துரிதப்படுத்தும்படி அமலாக்கத்துறை டில்லி உயர்நீதி மன்றத்தில் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜா, கனிமொழி மற்றும் பிற குற்றவாளிகள் இன்னும் சிபிஐ மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இதுகுறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 7ந்தேதி முதல்  ஃபாஸ்ட் டிராக் முறையில் விசாரிக்கப்படும் என்று டில்லி உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.