டில்லி,

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கில் முறைகேடு நடந்த வழக்கில் வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, 2ஜி வழக்கின் தீர்ப்பு நாட்டுக்கு ஆதரவாவே இருக்கும் என்று கூறினார்.

 

கடந்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான தொடரப்பட்ட வழக்கில், இந்த முறைகேடில் ஈடுபட்டதாக ராஜா, கனிமொழி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்புகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓபி சைனி  கூறி உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன்சாமி,  “2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; நாட்டுக்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகும்” என்று கூறினார்.