2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு: ராஜா, கனிமொழி விடுவிக்கப்படுவார்களா?

டில்லி,

2ஜி முறைகேடு வழக்கில் வரும் இன்று காலை 10.30 மணி அளவில்  தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

இன்று தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என ஏற்கனவே  நீதிபதி ஓபி சைனி அறிவித்த நிலையில், டில்லியில் இன்று பார் அசோசியேசன் சார்பாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறு வதாக அறிவிக்கிகப்பட்டுள்ளது.

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்  நீதி மன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட . திமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்றும் கோர்ட்டில் ஆஜராகின்றனர்.

இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே திமுகவை சேர்ந்த முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் சிறை சென்று, தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.

இந்த தீர்ப்பில் அவர்கள்மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர்கள் மீண்டும் சிறைசெல்ல நேரிடும். அவர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாகவில்லை என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

இன்று தமிழகத்தில் சென்னை  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவது தமிழக வாக்காளர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பை நாடு முழுவதும் பொதுமக்கள் உள்பட திமுகவினரும் பெரிதும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.