2ஜி தீர்ப்பு: பரபரப்பாக காணப்படும் பாட்டியாலா நீதிமன்ற வளாகம்!

டில்லி,

டந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து சிபிஐ கோர்ட்டு அமைந்துள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்கள்.

சுமார் 9.45 மணி அளவில்  சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி நீதி மன்றம் வந்தார்.

திமுக எம்.பி. கனிமொழி யுடன்  அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் திமுக எம்..பிக்கள், டி.ஆர்.பாலு, அமிர்தம் போன்றோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியன்சாமி, முக்கிய அப்ரூவரும்  நீதிமன்றம் வந்திருக்கிறார்கள்.

தீர்ப்பு வெளியாவதை தொடர்ந்து   500 க்கும் மேற்பட்ட திமுகவினர் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

தீர்ப்பு இன்று வெளியாவது காரணமாக  போலீஸ் அதிரடிப்படை பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளது. சிபிஐ கோர்ட்டு உள்ள பாட்டியாலா அவுஸ்  கோர்ட்டை சுற்றி 1 கிமி வரை சாலைகள் தடுப்பு வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.