2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்!: மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்,  தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விற்பனையில் நாட்டிற்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது  சி.பி.ஐ. வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு டில்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள்  ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகளும் பதிவு செய் யப்பட்டுள்ளன.  கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல், இந்த வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய வாதத்தின் போது ஆ.ராசா நேரில் ஆஜரானார்.  அப்போது மத்தி அரசு வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர், “ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் ஆ.ராசா மிகப்பெரிய மோசடியில் ஈடு பட்டிருக்கிறார். இதனால் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு ஆவணங்கள் மூலம்  ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே,  ஆ.ராசாவை குற்றவாளி யாக அறிவித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.