டில்லி,

டந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக    சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி  தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஊழல்  வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட 14 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை தொடர்ந்து,  முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர்  காலை 9.30மணி அளவில் சிபிஐ கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களுடன் கனிமொழி யின்  தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் திமுக எம்..பிக்கள், டி.ஆர்.பாலு, அமிர்தம் போன்றோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஷாகித் பல்வா, ஆசிப் பால்வா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் ஷரத், கார்ப்பரேட் புரோக்கர் நீரா ராடியா, சித்தார்த் பெகுரா, வினோத் கோயங்கா,  கவுதம் ஜோணி, ஹரி நாயர், கரீம் மொராணி, சஞ்சய் சந்திரா, சுரேந்திர பிரபாரா உள்பட பலர் கோர்ட்டில்ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியசாமியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

தீர்ப்பு காரணமாக பாட்டியாள நீதிமன்ற வளாகம் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.